தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள்

வாட்ஸ் அப்பில் வீடியோக்களை மியூட் செய்யும் வசதி: சோதனையில் புதிய அப்டேட்!

வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு வீடியோ அனுப்பும் போது அதனை மியூட் செய்து அனுப்பும் வசதியை அந்நிறுவனம் சோதனை முறையில் கொண்டு வந்துள்ளது.

வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் பயனர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இதற்கு பயனர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்நிலையில் வீடியோக்களை ஒருவருக்கு அனுப்பும் போது மியூட் செய்து அனுப்பும் வசதியை அந்நிறுவனம் சோதனை முறையில் கொண்டு வந்துள்ளது. மற்ற அனைத்து ஆப்ஷன்களும் எப்போதும் போல்தான் இருக்கிறது. வீடியோவை மியூட் செய்வதற்கு Volume போன்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட Device-ல் வாட்ஸ் அப் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Advertisement:

Related posts

“கட்சியின் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை”; அமைச்சர் ஜெயக்குமார்

Niruban Chakkaaravarthi

இந்தியாவில் ஒரு கோடியை கடந்த கொரோனா!

Saravana

எல்.முருகன் மீது திமுக வழக்குப்பதிவு!

Niruban Chakkaaravarthi

Leave a Comment