இந்தியா முக்கியச் செய்திகள்

கொரோனா எதிரொலி: திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் நிறுத்தம்

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத்தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் நிறுத்தப்படுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,52,879 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,33,58,805 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 839 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,33,434 ஆக உள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,908 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை தங்களைக் காப்பாற்றிக்கொள்ளப் பல விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகளில் 50 சதவிகிதத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பேருந்து, வாகனங்களில் குறைந்த அளவில் மட்டுமே பயணிகள் பணிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் திருப்பதி ஏழுமையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்றுவரை சாமி தரிசனத்திற்கு இலவச டோக்கன் பெற்றவர்கள் வருகின்ற செவ்வாய்க்கிழமை வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

Advertisement:

Related posts

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Gayathri Venkatesan

தொண்டர்களை பார்த்து காரை நிறுத்திய முதல்வர் பழனிசாமி

Ezhilarasan

வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!

Karthick