கட்டுரைகள் முக்கியச் செய்திகள்

ஊரடங்கின் ஓராண்டு நிறைவு: பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு


வெ. காயத்திரி

கட்டுரையாளர்

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிகழ்ந்த குற்றங்கள் சம்பவங்கள் குறித்து எடுத்துரைக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் நோய்த்தொற்றில் இருந்து தப்பித்த மக்கள் வேலையின்மை, வருமானம் இழப்பு, பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிப்பு, குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என அவர்கள் மீண்டே வரமுடியாத நிலைக்கு தள்ளியது.

குறிப்பாக நாட்டில் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் இந்த ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ளது. பெண்கள் வேலைக்கு சென்று வந்தது அவர்களுக்கு நிம்மதியை அளித்திருக்கும். ஆனால் ஊரடங்கு காலத்தில் குடும்பத்தில் மதுபோதைக்கு அடிமையான ஆண்கள் கையில் பணம் இல்லாமலும் மதுகடைகள் மூடப்பட்டதாலும் உண்டான கோபத்தை வீட்டு பெண்களிடம் காண்பித்தார்கள். இதுவே குடும்ப வன்முறையின் ஆரம்பப் புள்ளியாகும்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் முதல் செப்டம்பர் வரை இந்தியாளவில் பெண்கள் மீதான நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் முதல் மூன்று இடங்களில் உத்தர பிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேல் குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து மட்டும் 70 சதவீதம் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் சார்ந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக பெண்கள் தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. மறுபுறும் ஊரடங்கு காலகட்டத்தில் வட- கிழக்கு மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்த அளவில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களை போல் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு 92,000 அழைப்புகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உலகளவில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை, சைபர் குற்றம் உள்ளிட்டவை கொரோனா பரவலால் அதிகமாக இருந்த ‘ரெட் சோன்’ என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவு நடைபெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலக்கட்டத்தில் பெண்கள் மீது நடந்த வன்முறைகள் தவிர்த்திருக்கப்பட வேண்டியவை, இதுபோன்ற காலக்கட்டத்தில் பெண்கள் மீதான வன்முறைகளை நடக்காதவாரு அரசு நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement:

Related posts

கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி காவல் நிலையத்தில் புகார்!

Niruban Chakkaaravarthi

முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்: சி.டி.ரவி

Niruban Chakkaaravarthi

அரசியல்வாதியாக நான் பிறந்த ஊர் கோவை: கமல்ஹாசன்

Saravana Kumar