தமிழகம் முக்கியச் செய்திகள்

சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கொள்கை வெளியீடு!

சென்னை எம்.ஆர்.சி நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கொள்கையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் முதல்வர் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மணப்பாறை, தருமபுரி உள்ளிட்ட 4 இடங்களில் தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 20 தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை தொடங்கி தற்போது முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

12-ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு!

Niruban Chakkaaravarthi

பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!

Jayapriya

“தமிழகம் வெற்றிநடை போடவில்லை” – கனிமொழி விமர்சனம்

Niruban Chakkaaravarthi

Leave a Comment