குற்றம்

காதல் ஜோடி தற்கொலை முயற்சி; காதலன் பலி

கரூர் அருகே தற்கொலைக்கு முயற்சி செய்த காதல் ஜோடியில் காதலன் பலியானார், காதலி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கன்னிமேக்கிபட்டியைச் சேர்ந்தவர் அஜித். இவரும் அதே பகுதியை சேர்ந்த சிவரஞ்சனியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களது காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அதன்படி இருவரும் கரூர் மாவட்டம் மணவாடிக்குச் சென்று அங்குள்ள தோட்டத்தின் அருகே பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதையடுத்து ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த இருவரையும் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இதில், அஜித் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சிவரஞ்சனி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement:

Related posts

அறிவுரை கூறிய அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!

Nandhakumar

சமூக வலைதளத்தில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது!

Jeba

மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது.

Jayapriya

Leave a Comment