ஆசிரியர் தேர்வு தமிழகம்

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது குரூப் 1 தேர்வு!

தமிழக அரசுப் பணிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு மாநிலம் முழுவதும் நாளை நடைபெறுகிறது.

துணை ஆட்சியர், டி.எஸ்.பி., தீயணைப்பு அலுவலர், வணிகவரித்துறை உதவி ஆணையர் என்று மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஏப்ரல் 5ஆம் நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்வு ஒத்திவைக்கப்பட்டு நாளை நடைபெறுகிறது.

இந்த தேர்வை 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள தேர்வுக்கு, தேர்வர்கள் 9.15 மணிக்கு முன்பாகவே தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக, இந்த தேர்வில் ஓ.எம்.ஆர் தாளில் விடையைக் குறிப்பதற்கு, கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தெரியாத கேள்விகளுக்கு “E” என்ற கட்டத்தை குறிக்க வேண்டும் மற்றும் விடையளித்த மொத்த கேள்விகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும் போன்ற நடைமுறைகள் புதிதாக அமலுக்கு வருகின்றன.

Advertisement:

Related posts

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மலர்ந்த காதல்: வாடிவாசலில் திருமணம்

Niruban Chakkaaravarthi

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Dhamotharan

இந்தியாவிலேயே ஊழலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: கமல்ஹாசன்

Saravana

Leave a Comment