குற்றம்

திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, ஆட்டோ ஓட்டுநரை தாக்கச் சென்ற கும்பலை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், நிலக்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கொங்கர்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் என்பவர், நாகராஜை, தமது கிராமத்திற்கு சவாரிக்கு அழைத்துள்ளார். கருப்பன் மதுபோதையில் இருந்ததால், நாகராஜ் அவரை ஆட்டோவில் ஏற்ற மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கொங்கர்குளத்தைச் சேர்ந்த தமது நண்பர்கள் 10 பேருடன், செங்கோட்டை கிராமத்திற்கு சென்ற கருப்பன், அங்கு ஆட்டோ ஓட்டுநர் நாகராஜை தாக்க முயன்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த அதிமுக பிரமுகர் செல்வராஜ் என்பவர், அதனை தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து, அந்த கும்பல், செல்வராஜை தாக்கியதில், அவர் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செங்கோட்டை கிராம மக்கள், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Advertisement:

Related posts

தவறான தொடர்பு: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்!

Saravana

வாடகைக்கு குடியிருந்தவர் கொடுத்த தொல்லையால் வீட்டை காலி செய்துவிட்டு சென்ற வீட்டு உரிமையாளர்

Ezhilarasan

வேலைக்கு சென்ற இடத்தில் தவறான உறவு: எலக்ட்ரீசியன் தலையில் கல்லைப் போட்டு கொலை!

Saravana

Leave a Comment