சொந்தமாக வெப்சைட் தொடங்க உள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, அது பயன்பாட்டுக்கு வரும் தேதி குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியுட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் 2வது மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா 1997ம் ஆண்டு, டி சிவாவின் தயாரிப்பில் வெளிவந்த அரவிந்தன் படத்திற்கு இசையமைத்து தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். ஜாம்பவான்களான இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இசையுலகில் கொடிகட்டி பறந்த சமயத்தில் இவர் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார்.
இப்போது நடிகர்களுக்கு இணையாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அவர், தனக்கென சொந்தமான வெப்சைட் ஒன்றை தொடங்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், U1 Records வெப்சைட்டை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். நாளை மதியம் 2 மணிக்கு இந்த வெப்சைட் அறிமுகம் செய்யப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இசை தொடர்பான பல விஷயங்களை அவர் அந்த வெப்சைட்டில் பகிர்வார் என தெரிகிறது. யுவனின் வெப்சைட்டை காண இசை ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
Advertisement: