குற்றம் முக்கியச் செய்திகள்

தம்பியின் கழுத்தை நெரித்து கொலை செய்த அண்ணன்கள்!

மாங்காட்டில் குடி போதையில் தகராறு செய்த தம்பியை அண்ணன்கள் இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், சோழன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவில்ராஜ். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தினமும் மது அருந்திவிட்டு குடும்பத்தினருடம் தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களுடன் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவருக்கும் அவருடைய அண்ணன்கள் 2 பேருக்கும் இடையே நீண்ட நேரம் வாய்த்தகராறு நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலையில் கோவில்ராஜ் உயிரிழந்ததாக அவரது அண்ணன்கள் ஊர் மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, உறவினர்கள் முன்னிலையில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே கோவில்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது நண்பர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், மதுபோதையில் தகராறு செய்த தம்பியை அண்ணன்கள் இரண்டு பேர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Related posts

இந்தோனேசியா நிலநடுக்கம்: கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

Saravana

2020ம் ஆண்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

Jayapriya

நேர்மையான நல்லாட்சியை வழங்குவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

Karthick