குற்றம் முக்கியச் செய்திகள்

கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை செய்த இளைஞர்!

பெரம்பலூரை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர், அடமானம் வைத்த நிலத்தை மீட்க
முடியாத விரக்தியில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் 31 வயதான ஜேசுதாஸ்.
அதே ஊரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மரியஜோசபிடம் ஜேசுதாஸ்
கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வாங்கிய கடனை வட்டியுடன்
கொடுத்த பிறகும் அதுக்கு ஈடான நிலத்தை திருப்பி கொடுக்காததால், ஜேசுதாஸ் மன
உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர், மரியஜோசப் கடன் விவகாரத்தில் ஜேசுதாஸை டார்ச்சர் செய்துள்ளார். இதனால்தான் ஜேசுதாஸ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின்னர் அவருடைய உறவினர்கள் அவரை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஜேசுதாஸின் உடலுடன் அன்னமங்கலத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரச்சினை குறித்து
நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் உறவினர்கள் சாலை மறியலை
கைவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement:

Related posts

“அதிமுக இணைப்பு பற்றி டிடிவி.தினகரன் பேசுவது விநோதமானது”; அமைச்சர் ஓஎஸ்.மணியன்!

Jayapriya

ஜூன் மாதம் புதிய தலைவர்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு!

Saravana

இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி; பிரதமர் மோடி பாராட்டு!

Jayapriya

Leave a Comment