குற்றம்

மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது.

பேஸ்புக்கில் பழகிய மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பருக்கும் இடையே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ச்செல்வன் மின்சார வாரியத்தில் தற்காலிமாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தமிழ்ச்செல்வன் மாணவியை ஆபாசமாக படம் எடுத்து, தான் சொல்வதை கேட்காவிட்டால் அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மாணவி மற்றும் அவரது தாயாரிடம் மிரட்டி வந்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவின் தாய் இதுகுறித்து ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலீசார் தமிழ் செல்வனிடமிருந்த ஆபாச புகைப்படங்கள் பறிமுதல் செய்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Related posts

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை!

Nandhakumar

காதலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதை தெரிந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை..

Saravana Kumar

கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 சவரன் நகை கொள்ளை!

Jeba

Leave a Comment