பிரபல மல்யுத்த வீரர்களான கீதா, பபிதாவின் உறவினரான ரித்திகா போகத்(17) தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாநில அளவிலான போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தற்கொலை நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ம் தேதி ரித்திகா போகத்தின் உடல் அவரது உறவினர் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த மார்ச் 12 மற்றும் 14ம் தேதிகளுக்கிடையே ராஜஸ்தானில் நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ரித்திகா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், விசாரணை தொடர்வதாகவும் ஹரியானா மாநில டிஎஸ்பி ராம் சிங் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

ரித்திகாவின் உடல் அவரது உறவினரான பிரபல மல்யுத்த வீரரான மகாவீர் சிங்கின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இது தன்னுடைய குடும்பத்திற்கு மிகவும் நெருக்கடியான நேரம் என்றும், விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது வாழ்க்கையினுடைய ஒரு அங்கம் என்றும் மகாவீர் சிங் தெரிவித்துள்ளார்.
2010 காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் கீதா போகத் முதல்முறையாக தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும், இந்தியாவிலிருந்து உலக மல்யுத்த போட்டிக்கு தேர்வான முதல் பெண் கீதா போகத் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: