உலகம் முக்கியச் செய்திகள்

கொரோனா காலத்தில் உலகிலேயே மிகப்பெரும் தொங்கும் பாலத்தைத் திறந்த போர்ச்சுகல்!

உலகிலேயே மிகப்பெரிய தொங்கும் பாலமானது வடக்கு போர்ச்சுகலில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் மக்கள் நடப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

வடக்கு போச்சுகளில் உள்ள அரோக்கா என்ற சிறிய நகரத்தில் பைவா என்ற நதி ஓடுகிறது. இந்த நதி குறுக்கே இந்த தொகும் பாலம் அமைந்துள்ளது. சுமார் 516 மீட்டர் நீளமும், ஆற்றிலிருந்து 175 மீட்டர் உயரத்திலும் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தைக் கட்டமைக்க 20 கோடி 75 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளது.

வடக்கு போர்சுகலில் உள்ள அரோக்கா மிகப் பெரிய சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கே ஓடும் பைவா நதி பாதுகாக்கப்பட்ட இடமாகும். கொரோனா தொற்று உலகம் எங்கும் பரவியதைத் தொடர்ந்து, இங்கே சுற்றுலாப்பயணிகள் செல்வது வெகுவாக குறைந்தது. மீண்டும் சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்த இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக அரோக்கா மேயர் மார்கரிடா பெல்லம் கூறியுள்ளார்.

தற்போது இந்த பாலத்தில் அங்கிருக்கும் உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. திங்கள்கிழமை முதல் இந்த பாலத்தில் அனைவரும் முன்பதிவு செய்துவிட்டுப் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

Advertisement:

Related posts

ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதால்தான் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடிந்தது! -ஜெய்சங்கர்

Niruban Chakkaaravarthi

10% இட ஒதுக்கீடு அமல்படுத்த இயலாது: தமிழக அரசு திட்டவட்டம்

Karthick

காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

Gayathri Venkatesan