செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

வாக்குச் சதவிகிதத்தில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இத்தேர்தலில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக வாக்குச்செலுத்தி உள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 4,57,76,311 பேர் வாக்களித்துள்ளனர். இதில் 3,09,23,651 ஆண் வாக்களர்களில் 2,26,03,156 பேர் வாக்களித்துள்ளனர். மேலும் 3,19,39,112 பெண் வாக்காளர்களில் 2,31,71,736 பேர் வாக்களித்து உள்ளனர்.

மாவட்ட வாரியாக, திருவள்ளூரில் 17,35,763 ஆண்களும், 17,75,017 பெண்களும் வாக்களித்துள்ளனர். சென்னையில் 19,94,505 ஆண்களும், 20,61,473 பெண்களும் வாக்களித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் 6,40,157 ஆண்களும், 6,734,10 பெண்களும் வாக்களித்துள்ளனர். திருச்சியில் 11,35,780 ஆண்களும், 12,02,728 பெண்களும் வாக்களித்துள்ளனர். கடலூரில் 10,57,478 ஆண்களும், 10,89,569 பெண்களும் வாக்களித்துள்ளனர். தஞ்சாவூரில் 10,02,827 ஆண்களும், 10,58,880 பெண்களும் வாக்களித்துள்ளனர். மதுரையில் 13,26,687 ஆண்களும், 13,70,791 பெண்களும் வாக்களித்துள்ளனர். விருதுநகரில் 8,13,542 ஆண்களும் 8,57,262 பெண்களும் வாக்களித்துள்ளனர். திருநெல்வேலியில் 6,64,627 ஆண்களும், 6,93,417 பெண்களும் வாக்களித்துள்ளனர். கன்னியாகுமரியில் 7,84,658 ஆண்களும், 7,86,781 பெண்களும் வாக்களித்துள்ளனர். திருப்பூரில் 11,66,417 ஆண்களும் , 11,93,104 பெண்களும் வாக்களித்துள்ளனர்.

Advertisement:

Related posts

கருப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு ஜாமீன்!

Niruban Chakkaaravarthi

புரெவி புயல் பாதிப்புக்கு 1,514 கோடி ரூபாய் நிவாரணம் தேவை! -மேலாண்மைத்துறை ஆணையர்

Nandhakumar

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த 86 வயது மூதாட்டி!

Gayathri Venkatesan