செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

சுய உதவிக் குழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

சுய உதவிக் குழுக்கள் வாங்கியிருக்கும் கடன்களையும் முதல்வர் ரத்து செய்ய வேண்டுமென சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், சென்னை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவந்தால் குறிப்பிட்ட அளவு மட்டுமே அதன் விலையை உயர்த்த முடியும் என்பதால், அவ்வாறு மத்திய அரசு செய்யாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து இருக்கும் நேரத்தில் இந்தியாவில் மட்டும் டீசல் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். சுயஉதவிக் குழுக்கள் வாங்கியிருக்கும் கடன்களையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Advertisement:

Related posts

ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; அரசியல் எதிரிகளின் சதி என அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Saravana

அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்திற்கு வருகிறது மத்தியக் குழு!!

Karthick

குடிபோதையில், தன் வீட்டையே தீ வைத்து கொளுத்திய காவலர்!

Jayapriya