பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாட்டிற்காக சேவை செய்யவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையில் இணைந்து பணியாற்ற விரும்புதாக இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அங்கு இயல்புநிலை படிப்படையாக திரும்பி வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் கத்துவா பகுதியில் காவல்துறையில் காலியாக உள்ள 89 சிறப்பு அதிகாரிகளுக்கான ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாநில எல்லைப் பகுதிகளை சேர்ந்த 500 பெண்கள் உட்பட 2 ஆயிரத்து 800 இளைஞர்கள் கலந்துகொண்டு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கலந்துகொண்ட ரிம்பி சர்மா என்ற இளம்பெண் ஒருவர், நாட்டில் நிலவும் தீவிரவாதத்தை அழிக்க வேண்டும் என்பதே எல்லை பகுதிகளில் வசிப்பவர்களின் கனவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்து தனது பெற்றோருக்கும், கிராமத்திற்கும் பெருமை சேர்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்..
Advertisement: