இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

”ஏன் மாஸ்க் அணியவில்லை?” என்று கேட்ட நகராட்சி பெண் ஊழியரைபலமாகத் தாக்கியப் பெண்

மும்பையில் முகக்கவசம் அணியாமல் சென்ற பெண்ணை, முகக்கவசம்
அணியுமாறு வலியுறுத்திய நகராட்சி பெண் ஊழியரை பலமாகத் தாக்கிய
வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரிஹான் மும்பை நகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர்,
முகக்கவசம் அணியாமல் ஆட்டோவில் சென்ற பெண் ஒருவரை நிறுத்தி
முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளார். அப்பொழுது சற்றும்
எதிரபாரத விதமாக அப்பெண் நகராட்சி ஊழியரை அடித்தும் எட்டி
உதைத்தும் தாக்கியுள்ளார். மேலும், ”எப்படி என்னை நீ தடுத்து நிருத்தலாம்,
எப்படி நீ என்னை தொடலாம்” என்று கூறிக்கொண்டே அப்பெண் நகராட்சி
ஊழியரை அடித்து பலமாகத் தாக்கினார். இச்சம்பவம், மும்பை கண்டிவாலி
சாலையில் நடந்துள்ளது.

மேலும் கொரோனா நோய் தொற்று அதிகரித்துவருவதால், முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வோருக்கு ரூபாய் 200 அபராதத் தொகையை மும்பை அரசு விதித்துள்ளது.மகாராஷ்டிராவில் வியாழக்கிழமை இரவு வரை 24 மணி நேர காலத்தில், 25,833 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு
தொற்றுநோய் பரவியதிலிருந்து அதிகமாகும்.

முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள்
பின்பற்ற தவறினால் மீண்டும் கடுமையான ஊரடங்கு உத்தரவு
அறிவிக்கப்படும் என்று மும்பை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே
அறிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

ஆன்லைன் சூதாட்ட தடை: சட்டமுன் வடிவு நிறைவேறியது!

Niruban Chakkaaravarthi

தடகள வீராங்கனை அஸ்ஸாமில் டி.எஸ். பி.யாக நியமனம்!

Gayathri Venkatesan

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்

Jeba