உலகம்

தன்னுடன் சண்டையிட்ட ஆண் ஒருவரின் நாக்கை கடித்து துப்பிய இளம்பெண்

ஸ்காட்லாந்தில் தன்னிடம் சாலையில் சண்டையிட்ட ஒருவரின் நாக்கை இளம்பெண் கடித்து துப்பிய பெண் தனது குற்றத்தை நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கடந்த 2019ம் ஆண்டு எடின்பர்க் பகுதியில் ஜேம்ஸ் மெக்கென்சி எனபவர் பெத்தானே ரியான் என்ற பெண்ணிடம் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது விரைவில் மோசமான சண்டையாக மாறியது. இதில் பயங்கர கோபமுற்ற ஜேம்ஸ் மெக்கென்சி, ரியானை அடிக்க பாய்ந்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட ரியான் ஜேம்ஸை கீழே தள்ளி உதட்டில் முத்தமிட்டுக் கொண்டே அவரது நாக்கை அழுத்தமாக கடித்து நாக்கில் இருந்து ஒரு பகுதியை கீழே துப்பியுள்ளார்.

இதையடுத்து, உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே அந்த பெண் கடித்து துப்பிய நாக்கின் ஒரு பகுதியை அந்தவழியே வந்த கடற்பறவை தூக்கி சென்று விட்டது.

இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அறுவை சிகிச்சையின் மூலம் இழந்த நாக்கின் பகுதியை இணைக்கும் வாய்ப்பினையும் இழந்தார். இதுதொடர்பாக நடந்து வந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜரான ரியான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன்பின் அவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீல் மார்ட்டின், சம்பவம் நடந்த அன்று எனது கட்சிக்காரர் வித்தியாசமாக நடந்து கொண்டுள்ளார் என தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

ஓடிடி தளங்களுக்கு கட்டுபாடு: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்!

Jayapriya

பிரிட்டன், ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து தென் கொரியாவிலும் பரவியது புதிய வகை கொரோனா வைரஸ்!

Saravana

வூஹானில் கொரோனா உருவானது எப்படி..? ஆராய்ச்சியை தொடங்கிய உலக சுகாதார அமைப்பு..

Niruban Chakkaaravarthi