குற்றம்

திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் போலீஸில் சரண்

திருவள்ளூர் அருகே திருமணமாகி ஒரே மாதத்தில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏர்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லத்தூர் விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவருக்கும் மகேஸ்வரி என்பருக்கும் கடந்த ஒரு மாதம் முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், அவர்களுக்கு இடையே திருமணம் முடிந்ததில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கோபி தனது மனைவி மகேஸ்வரியின் கழுத்தை கத்தியில் அறுத்துள்ளார்.

இதில், மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கோபி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Related posts

நடைமேடையில் தூங்கிய இளைஞர் கழுத்தறுத்து கொலை!

Jeba

பழகிய மூன்றே நாட்களில் சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட தவறான தொடர்பு… சமூக வலைதளத்தால் நேர்ந்த அவலம்!

Dhamotharan

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

Jeba