செய்திகள் முக்கியச் செய்திகள் விளையாட்டு

சென்னை – டெல்லி அணியின் வெற்றியைத் தீர்மானிக்கும் வீரர்கள் யார்?

இன்று மாலை நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மும்பை மைதானத்தில் மோத உள்ளனர். இவ்விரு அணிகளில் எந்த வீரர் போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்க உள்ளனர் என்பதைப் பார்க்கலாம்.

நேற்று சென்னையில் தொடங்கிய ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலேயே மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் இறுதியில் பெங்களூரு அணி 1 விக்கேட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சென்னை சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது. அதில் சிஎஸ்கே அணியின் முக்கிய ஆட்டக்கார்களாக ரெய்னா. ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு, ரூட்டுராஜ் கைக்வாட், சாம் கர்ரன், தீபக் சாஹர் மற்றும் புதிய நபர்களாக இடம்பெற்றுள்ள மொயின் அலி ஆகியோர் முக்கிய வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.


சிஎஸ்கே அணியில் இன்றைய ஆட்டத்தில் இடது கை பேட்ஸ்மானான சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பு அணிக்கு கூடுதல பலமாக அமைந்துள்ளது. மேலும் ஆல் ரவுண்டர்ஸ் டுவெயின் பிராவோ, சாம் கர்ரன் மற்றும் மொயின் அலி ஆகியோரின் பங்களிப்பும் கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பெங்களூரு அணிக்காக விளையாடிவந்த மொயின் அலியை இந்த ஆண்டு சிஎஸ்கே அணி 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. வலது கை ஸ்பின் பௌலிங் மற்றும் இடது கை பேட்டிங்கில் மொயின் அலி பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்.

மேலும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சார்பில் முக்கிய ஆட்டக்கார்களாக இஷாந்த் ஷர்மா, அஜிங்கிய ரஹானே, டாம் கர்ரன், பிரித்வி ஷா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷிகர் தவான், ககிசோ ரபாடா, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஸ்ரேயர்ஸ் ஆகியோர் இந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களாக விளங்குகின்றனர். இந்த அணியில் தற்போது இளம் வீரர்கள் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.

டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் முதன் முறையாக களமிறங்குகிறார். இந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா பவர் பிளே ஓவர்களில் எதிரணியில் இருப்பவர்களை திணறடிக்கும் திறமையைக் கொண்டுள்ளார்.

ககிசோ ரபாடாவிடம் கடைசி ஓவர்களில் பேட்ஸ்மேன்களை ரன் குவிக்க விடாமல் களங்கடித்துவிடுவார். இதனாலேயே இந்த அணியின் முக்கிய நாயகனாக இவர் உள்ளார். மேலும் ஷிகர் தவான், ஸ்ரேயர்ஸ் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் அணியில் இருப்பது அணிக்கான பலத்தை காட்டுகிறது.

டெல்லி அணியின் இளம் ஆட்டக்கார்களின் ஆட்டம் போட்டியின் விறுவிறுப்பை அதிகரித்து அவர்களுக்கு வெற்றி தருமா அல்லது சென்னை சிஎஸ்கே அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த வீரர்களின் தங்களுடைய அனுபவ திறமையில் தங்களுடைய முதல் போட்டியை வென்று வாகைசூடுவார்களா என்பதை இன்று மாலை நடக்கும் போட்டியின் தன்மைதான் நிரூபிக்கும்

Advertisement:

Related posts

தமிழகத்தை சீரமைப்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு: கமல்ஹாசன்

Saravana

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு மீறல் : ரூ 2.52 கோடி அபராதம் வசூல்

Gayathri Venkatesan

வாக்களிக்கும்போது முககவசம் கட்டாயம்: ராதாகிருஷ்ணன்!

L.Renuga Devi