வாட்ஸ் அப்பில் அனுப்பும் வீடியோவின் ஆடியோவை மியூட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் chat செயலியாக வாட்ஸ் அப் விளங்குகிறது. அவ்வப்போது பயனர்களுக்கு புதுபுது வசதிகளை அப்டேட் மூலம் கொடுத்து வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் தனது தனிநபர் பாதுகாப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. இது பயனர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை பயனர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, வீடியோ அனுப்பும் போது அதனை மியூட் செய்து அனுப்பும் அம்சத்தை சோதனை செய்துள்ளது. தற்போது 2.21.3.13 வெர்ஷன் வகை பீட்டா வாட்ஸ் அப்பில் இந்த அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் குறைபாடுகள் ஏதுமின்றி இருந்தால் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement: