தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஓட்டுப்போட தேவையான ஆவணங்கள் என்னென்ன?

வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க, தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கடவுச் சீட்டு உள்ளிட்ட 11 ஆவணங்களை பயண்படுத்தி வாக்களிக்கலாம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழக தலைமை தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் வாக்களிக்க பயன்படுத்தக் கூடிய ஆவணங்கள் குறித்த விவரங்களை வண்ணப்படங்கள் வாயிலாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கிய மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, நாடாளுமன்றம் மற்றம் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரசு அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு அட்டை.

ஓய்வூதிய ஆவணம், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்தியத் தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, வங்கி அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்கு புத்தகங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டதின் கீழ் வழங்கப்பட்ட பணி அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து சென்று வாக்களிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

பெட்ரோல் விலை உயர்வால் அமளி: நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு!

Jeba

குன்னூரில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் புலி, கருஞ்சிறுத்தை!

Jeba

முதல்வர் பழனிசாமியுடன் நேருக்குநேர் விவாதிக்கத் தயார்: மு.க.ஸ்டாலின்

Jeba