இந்தியா செய்திகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்க மமதாவுக்கு உத்தரவு!

தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய படைகளுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மமதா பேசியது குறித்து நாளைக்குள் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28ஆம் தேதி தேர்தல் பரப்புரையின் போது, வாக்குச்சாவடிகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ள மத்திய படையினர் பெண்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாக மமதா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேலும் அப்படி பெண்கள் தடுக்கப்படும் பட்சத்தில் பெண்கள் மத்திய படைகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மம்தாவின் இந்த பேச்சு தேர்தல் விதிமுறையை மீறுவதாக இருப்பதாகவும் இது குறித்து நாளை 11 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படியும் அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மம்தா பானர்ஜிக்கு எதிராக தேர்தல் ஆணையம் இரண்டாவது நோட்டீசை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு மதரீதியாக வாக்காளர்களை பிளவுபடுத்தும் வகையில் மம்தா பானர்ஜி செயல்படுவதாகவும் அதுகுறித்து விளக்கம் அளிக்கும்படியும் முதல் நோட்டீசை அனுப்பி இருந்தனர்.

Advertisement:

Related posts

லோக்சபா, ராஜ்யசபா தொலைக்காட்சிகள் இணைப்பு: உருவானது சன்சாத் தொலைக்காட்சி

Jeba

வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் மதுரை விமான நிலையம் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது!

Karthick

பெற்றோர்களின் அலட்சியம்: 3 சிறுமிகள் உயிரிழந்த சோகம்

Niruban Chakkaaravarthi