இந்தியா முக்கியச் செய்திகள்

கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு நன்றி!

ஜமைக்காவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக மேற்கிந்திய தீவு அணி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த இந்தியாவில், கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றை நட்பு நாடுகளுக்கும் இந்தியா அனுப்பி வருகிறது. கடந்த வாரம் மேற்கிந்திய தீவுகளிலுள்ள ஜமைக்காவுக்கும் தடுப்பு மருந்துகள் அனுப்பப்பட்டன. இந்நிலையில், ஜமைக்காவுக்குத் தடுப்பூசிகளை அனுப்பியதற்காக, மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் வீடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அதில்,“இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றி. இந்தியர்களும் நாங்களும் சகோதரர்கள்” என குறிப்பிட்டிருந்தார். கிறிஸ் கெய்ல் பதிவிட்ட வீடியோ “India in Jamaica” என்ற அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.. அதேபோல் ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கொரோனா தடுப்பு மருந்துகளை ஜமைக்காவுக்கு அனுப்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டிருந்தார்.

Advertisement:

Related posts

தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்: கே.பாலகிருஷ்ணன்

Jayapriya

ஜனநாயகக் கடமையாற்றிய கமல்!

Karthick

விவசாயிகள் போராட்டம்: இந்திய அரசு மீது இங்கிலாந்து அரசு அதிருப்தி

Jeba