செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் 34.7% வாக்குப்பதிவு!

மேற்கு வங்க மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 34.7 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று அசாம் மற்றும் மேற்கு வங்கத்திலும் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை வாக்குப்பதிவு இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், இன்று மூன்றாம் கட்டமாக 31 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் இந்த மூன்றாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 78.5 லட்ச வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது வரை 34.7% வாக்குப்பதிவாகி உள்ளது.

Advertisement:

Related posts

36 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி!

Karthick

நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு – மநீம தேர்தல் அறிக்கை வெளியீடு

Gayathri Venkatesan

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை : கனிமொழி

Niruban Chakkaaravarthi