இந்தியா செய்திகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கம், அசாமில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பகுதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மேற்கு வங்கத்தில் 37.4% வாக்குப்பதிவாகிவுள்ளது. அசாமில் 22.8% வாக்குப்பதிவாகி இருக்கிறது.

இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் 126 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள அசாமில் 39 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் 75 லட்ச வாக்காளர்களும் அஸ்ஸாமில் 73 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களும் உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மமதா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராமம் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறகிறது. இந்த தொகுதியில் மமதாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரியும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இளம் பெண் வேட்பாளர் மீனாக்ஷி முகர்ஜியும் போட்டியிடுகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரான சுவேந்து அதிகாரி, கடந்த டிசம்பர் மாதம் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாமில் 39 தொகுதிகளில் 345 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த துணை சபாநாயகர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இவர்களின் வெற்றி வாய்ப்பு இன்றைய வாக்குப்பதிவின் முடிவில் தெரியவரும்.

இரண்டு மாநிலங்களிலும் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மேற்கு வங்கத்தில் 37.4% வாக்குப்பதிவாகிவுள்ளது. அசாம் மாநிலத்தில் 22.8% வாக்குப்பதிவாகிவுள்ளது.

Advertisement:

Related posts

பெரிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு

Ezhilarasan

வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது!

Gayathri Venkatesan

ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்: ராஜேந்திர பாலாஜி!

Karthick