இந்தியா முக்கியச் செய்திகள்

மேற்குவங்கத்தில் 8வது கட்டமாக 35 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு!

மேற்குவங்கத்தில் 8வது கட்டமாக 35 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்துக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் கடந்த மார்ச் மாதம் 27 தேதி தொடங்கிய நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வாக்குப்பதிவின்போது பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

இந்நிலையில், 8வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. கொல்கத்தா, மால்டா, முர்சிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளுக்கு இன்று 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Advertisement:

Related posts

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம்:திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

Jeba

பாஜகவில் இணைந்தார் முன்னாள் திரிணாமூல் எம்.பி தினேஷ் திரிவேதி!

Karthick

“திமுகவின் தேர்தல் பரப்புரை அவதூறு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது” : முதல்வர் பழனிசாமி

Karthick