செய்திகள் முக்கியச் செய்திகள்

அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : உதயநிதி

விருதுநகர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட காரியாப்பட்டி பேருந்து நிலையம் முன்பு திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு அவர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின். அடுத்த 15 நாள் அதிமுகவை வீட்டுக்கு அனுப்பவும் மோடிக்கு பாடம் எடுக்கவும் திமுகவை ஆட்சியில் அமர்த்த கடுமையாக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த பாரளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணிக்கு கிடைத்த வெற்றி போல் இந்த முறையும் இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார். மேலும் அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும்மக்கள் பணத்தை செல்லாத காசாக மாற்றிய மோடி மற்றும் எடப்பாடியை மக்கள் செல்லா காசாக மாற்ற வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மேலும் பேசிய அவர், எந்த பேரிடர்க்கும் மத்திய அரசு போதிய நிதி உதவியை தமிழகத்திற்கு வழங்கவில்லை என்று கூறினார்.

மோடிக்கு மிகச் சிறந்த அடிமை யார் என்ற போட்டி அதிமுகவில் நிலவுகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எடப்பாடியை தெரியுமா என தெரியவில்லை என்றும் சென்ற தேர்தலில் எடப்பாடி முதல்வராக வேண்டும் என யாரும் வாக்களிக்கவில்லை என்று கூறினார். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி மக்களுக்கும், சசிகலாவுக்கும் மற்றும் மறைந்த முதல்வர் என யாருக்கும் உண்மையாக இல்லை என்று கூறினார். அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு மோடிக்கும் பிஜேபிக்கும் அளிக்கும் வாக்கு என்றும் உதய சூரியனுக்கு அளிக்கும் வாக்கு பிஜேபிக்கும் அதிமுகவுக்கும் வைக்கும் ஆப்பு என்றும் கூறியிருந்தார்.

Advertisement:

Related posts

பெண்களுக்கான சிறந்த இடம் சென்னை: ஐஐடி மும்பை நடத்திய ஆய்வில் தகவல்!

Dhamotharan

நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்; ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

Jayapriya

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!

Gayathri Venkatesan