தமிழகத்தில் சாமிக்காக அரசியல் பேச கட்சிகள் இருப்பதாகவும், ஆனால் பூமிக்காக அரசியல் பேச இங்கு கட்சிகள் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் இங்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் மல்லிகா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் சிவகங்கை அரன்மனை வாசல் முன்பு பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தின் நுழைவு வாயிலில் வேலு நாச்சியாரின் உருவ சிலையை வைப்போம் என்றார். பிரிட்டிஷ்காரர் வேல்ஸ் துரையே பாராட்டிய மாமன்னர்கள் மருது பாண்டியர்களுக்கு சிலை அமைப்போம் என்று பேசியதுடன், இயற்கை வளங்களை பாதுகாக்க நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முறை வாய்ப்பு தருமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், இந்த நாட்டில் சாமிக்கு அரசியல் பேச கட்சி இருக்கிறது. ஆனால் பூமிக்கு அரசியல் பேச கட்சிகள் இல்லை எனவும் தெரிவித்தார்.
Advertisement: