மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜூவை ஆதரித்து மதுரையில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி “உழைப்பால் நான் அமைச்சர் உட்பட அதிமுக அனைவரும் வளர்ந்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறக்கூடிய நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அதிமுக மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜூவை ஆதரித்து மதுரையில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி “உழைப்பால் நான் அமைச்சர் உட்பட அதிமுக அனைவரும் வளர்ந்துள்ளோம். திமுக தனது குடும்பத்தை வளர்த்து வருகிறார்கள்.” என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “செல்லூர் ராஜூ இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றவர். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை எனவே இவருக்கான வெற்றி சாதாரண வெற்றியாக இருக்க கூடாது. அம்மா ஆட்சி தொடரவேண்டும் என்றால் இவரை வெற்றி பெற வைக்கவேண்டும்.” என்றும் “திமுக சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக கூட்டணி மக்களுக்கு சேவை செய்யும் கூட்டணி.” என்றும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்

மேலும், “உழைப்பால் நான் அமைச்சர் உட்பட பலரும் அதிமுகவில் வளர்ந்துள்ளோம். திமுக தனது குடும்பத்தை வளர்த்து வருகிறார்கள். திமுகவில் நிதி நிதி என பெயர் வைத்து நாட்டில் நிதியை கொள்ளையடிகிறார்கள் திமுகவில் உள்ள வாரிசு அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். திமுகவை சேர்ந்த 20 பேர் தேர்தலில் நிற்கிறார்கள். திமுக வை நிர்வாகம் செய்ய முத்த தலைவர்கள் பல இருக்கும் நிலையில் பேரன் வயது உள்ள உதயநிதியை வைத்து பிரச்சாரம் செய்யும் பரிதாப நிலையில் உள்ளது. திமுகவில் வாரிசு அரசியலை அனுசரித்து சென்றால் தான் பதிவியில் இருக்க முடியும்.” என்றும் திமுகவை விமர்சித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
Advertisement: