இந்தியா முக்கியச் செய்திகள்

“தனியாருக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்!”: பிரதமர் மோடி

நிதி ஆயோக்கின் 6வது கூட்டத்தில் தலைமையேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தற்சார்பு இந்தியாவின் ஒரு பகுதியாக தனியாருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத்தின் முதல்வர் மற்றும், முக்கிய அமைச்சர்களும், நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார்.

இதில் தலைமையேற்று பேசிய பிரதமர் மோடி, கூட்டாட்சி தத்துவத்தின் அவசியத்தையும், நாட்டின் தற்சார்பு உலகத்திற்கு முன்னோடியாகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றை வெற்றிகரமாக கையாண்டதற்கு முக்கியக் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பை சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் துறையின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுவதாகவும், தனியார் துறைக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது தற்சார்பு இந்தியாவின் முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

”வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்க கமல் மறுப்பு தெரிவித்ததால் இந்த முடிவெடுத்தேன்”- அருணாச்சலம்!

Jayapriya

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

Karthick

லாலு சிகிச்சை: ஜார்கண்ட் முதல்வரை சந்திக்கும் தேஜஸ்வி

Saravana