புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி, தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது தங்களது கருந்து என்றும், ஆனால், கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதனை ஏற்போம் என்றும் தெரிவித்தார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக, கடந்த 35 ஆண்டுகளாக காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து போராடி வருவதாக அவர் கூறினார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரக்கூடாது என்பதுதான் பாஜகவின் எண்ணம் என்றும், பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் அளித்த மனுக்கள் அனைத்தும் த ள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Advertisement: