தமிழகம் முக்கியச் செய்திகள்

நாங்கள் ஒதுக்கப்படுகிறோம்: பட்டியல் இனப்பெண் கண்ணீர்

தாங்கள் ஒதுக்கப்படுவது குறித்து கண்ணீர் வடித்த பட்டியல் சமூக பெண்ணை, கட்டியணைத்து திமுக எம்.பி. கனிமொழி ஆறுதல் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில், விடியலைத்தேடி ஸ்டாலின் குரல் நிகழ்சியின் 3 நாட்கள் சுற்று பயணத்திற்க்காக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி , பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்று பயணம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக பென்னாகரம் பகுதியில் விடியலை தேடி ஸ்டாலின் குரல் நிகழ்சிக்காக சுற்று பயணம் மேற்கொண்டார். அப்போது ஏரியூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் அருந்ததியினர் காலனி பகுதியை சேர்ந்த அபிதா என்கிற பெண் எழுந்து நின்று கனிமொழியிடம் நாங்கள் தூய்மை பணி செய்யும் குடும்பம்.

எங்கள் பகுதியில் பட்டியல் இனத்தவரை ஒதுக்கியே வைக்கின்றனர். உங்களை வரவேற்கும் போது ஆரத்தி எடுக்கும் பெண்கள் கூட குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பெண்கள் தான் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் கூட எங்களை ஒதுக்கியே வைக்கின்றனர் என கண்ணீர் மல்க கூறியதை பார்த்த கனிமொழி ஓடி வந்து அந்த பெண்ணை கட்டி அணைத்து கண்ணீருடன் திமுகவில் சாதி மதம் பார்ப்பதில்லை எங்கள் கட்சியில் இனி நடக்காது என ஆறுதல் கூறினார். இந்த நெகிழ்சியான சம்பவம் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் நெகழ்ச்சியடைய செய்தது.

Advertisement:

Related posts

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருட்களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி தருமபுரி மருத்துவர்கள் சாதனை!

Jayapriya

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு: பிரதமர் மோடி தகவல்!

Saravana

அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது!

Ezhilarasan