தமிழகம் முக்கியச் செய்திகள்

சசிகலா வருகையை யாராலும் தடுக்க முடியாது: டிடிவி தினகரன்

சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்பதே தங்களின் ஒரே நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து, கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சசிகலா பெங்களூரு அருகேயுள்ள தேவனஹள்ளியில் ஒரு வாரமாக ஓய்வெடுத்து வந்தார். நாளை காலை 9 மணியளவில் புறப்பட்டு கார் மூலமாக சென்னை வருகிறார். சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அமமுகவினர் தயாராகி வருகின்றனர். ஆனால், வரவேற்பு அளிப்பதற்கு காவல் துறை தடை விதித்துள்ளதோடு, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.


இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் தேவனஹள்ளியில் தங்கி உள்ள சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது மட்டுமே எங்கள் நோக்கம், ஆட்சி அதிகாரம் கையில் வைத்து இருப்பவர்கள் இரண்டு நாட்களாக வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் டிஜிபி அலுவலகத்துக்கு ஓடிகொண்டு இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம்- ஒழுங்கு கெடுக்க முயற்சி செய்கிறார்களோ என்ற அச்சப்பாடு எங்களுக்கு உள்ளது. காவல் துறை நடுநிலையாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது, சசிகலாவை வரவேற்க அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் சசிகலா வருவதை யாராலும் தடுக்க முடியும் என்றார். மேலும் அவ்வாறு தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து, சசிகலா சென்னை சென்ற உடன் எம்.ஜி.ஆர் இல்லம், ஜெயலலிதா நினைவிடம் செல்ல விருப்பப்பட்டார். தற்போது நாங்கள் அனுமதி கேட்போம் என அறிந்து பொதுப்பணி துறை மூலம் நினைவிடம் மூடப்பட்டுள்ளது. சென்னை சென்ற பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் அதிகாரத்தை கையில் வைத்து இருப்பவர்கள் நேற்று பேட்டி அளிக்க தயங்கிய சம்பவம் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அதை கானும் போது சிரிப்பு வருகிறது எனவும் கூறினார்.

Advertisement:

Related posts

ஓட்டல் ஊழியருக்கு 3 லட்சம் டிப்ஸ் கொடுத்த வாடிக்கையாளர்!

Jayapriya

“தமிழகம் வெற்றிநடை போடவில்லை” – கனிமொழி விமர்சனம்

Niruban Chakkaaravarthi

”தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya

Leave a Comment