தமிழகம் முக்கியச் செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க குடோன் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்களைப் பாதுகாக்க 31 மாவட்டங்களில் ரூ.120.87 கோடியில் குடோன்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து 26 நாட்கள் கழித்து மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்குகள் எண்ணப்படும் இடைப்பட்ட காலத்தில் மின்னணு வாக்கு இயந்திரங்களைப் பாதுகாக்க குடோன்கள் அமைக்கப்பட்டுவருவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 31 மாவட்டங்களில் குடோன்கள் கட்டப்படவுள்ளது. தேவைப்படும் இடங்களில் இரண்டு குடோன்கள் கட்டப்படவுள்ளது. பெரிய ஹால் வசதியுடன் ஜன்னல்கள் இல்லாமல் குடோன்கள் கட்டப்பட்டுவருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடு போகாமல் இருக்க குடோன்கள் ஜன்னல்கள் இல்லாமல் கட்டப்படுகிறது. அதேபோல் பாதுகாப்புப் பணியாளருக்கான அறை, தேர்தல் அலுவலர் அறையுடன் குடோன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை நாமக்கல், நாகப்பட்டினம், தருமபுரி, தேனி, வேலூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் குடோன்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, சேலம் மற்றும் கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த மாத முடிவில் அனைத்து குடோன்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. மற்ற மாவட்டங்களில் குடோன்கள் அமைக்க இடங்கள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

Advertisement:

Related posts

ஐந்து கிலோ மீட்டருக்கு தடுப்பணை கட்டப்படும்: ராமதாஸ்!

Ezhilarasan

அரியலூர் அருகே ஜெயலலிதா, டிடிவி படம் ஒட்டப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான குக்கர்கள் பறிமுதல்

Saravana Kumar

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Saravana