நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.5.000லிருந்து ரூ.6,250 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!
தமிழக அரசு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் உள்ளிட்ட ஊதியங்களை உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஊதிய மறு சீரமைப்புக் குழுவின் பரிந்துரையின்படி நியாய விலைக்கடை புதிய ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.5.000லிருந்து ரூ.6,250 ஆகவும், அதேபோல கட்டுநர்களுக்கு ரூ.4,250லிருந்து ரூ.5,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு ரூ.8,600லிருந்து ரூ.29,000 ஆகவும், கட்டுநர்களுக்கு ரூ.7,800லிருந்து ரூ.26,000 ஆகவும் காலமுறை ஊதியம் உயர்தப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement: