செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இன்று தமிழக முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா அச்சம்மின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வாக்காளர் அட்டை, ஓடுநர் உரிமம், 100 நாள் வேலை அடையாள அட்டை, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, குடியிருப்பு அடையாள அட்டை, பான் கார்டு, அரசு பணியாளர் அடையாள அட்டை முதலிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்கும் மக்கள் எடுத்துச்செல்வது முக்கியம். மேலும் வாக்களர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் இன்று கேரளா, புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கத் தொடங்கி உள்ளனர். மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

Advertisement:

Related posts

கன்னியாகுமாரியில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளிப்பார்கள்! – பொன்.ராதாகிருஷ்ணன்

Gayathri Venkatesan

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா உறுதி!

Arun

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்த இபிஎஸ்- ஓபிஎஸ்!

Jayapriya