தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

அசாமில் வாக்குப்பதிவு நிறைவு!

அசாமில் இன்று நடைபெற்ற 40 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.

அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஏற்கனவே 86 தொகுதிகளுக்கு மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், இன்று மீதமுள்ள 40 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் பிபிஇ கிட் அணிந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அந்த சமயத்தில் வாக்கு மையத்தில் உள்ள அலுவலர்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பிபிஇ கிட் அணிந்திருந்தனர்.

இரவு 7 மணி நிலவரப்படி அசாமில் 82.29% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மே 2ம் தேதி நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலுக்கான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

Advertisement:

Related posts

கேரளா பாஜக முதல்வர் வேட்பாளர் ஸ்ரீதரன்!

Niruban Chakkaaravarthi

பழைய பொருள் கிடங்கில் திடீரென கொழுந்துவிட்டு எரிந்த தீ!

Niruban Chakkaaravarthi

திமுக எம்.பி கனிமொழி குணமடைய அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து!

Karthick