செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்

தனக்கு வாக்களித்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் எப்பொழுதும் துரோகம் செய்யமாட்டேன் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.

பரப்புரையின்போது பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டு காலத்தில் பொள்ளாச்சி முதல் கோவை வரை நான்கு வழிச்சாலை, அரசு மருத்துவமனை விரிவாக்கம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தனக்கு வாக்களித்த மக்களையும் தேர்தல் பணியாற்றிய தொண்டர்களையும் எப்பொழுதும் மறக்கமாட்டேன் எனக் குறிப்பிட்ட அவர், தன் தாய் மீது ஆணையாக அவர்களுக்கு துரோகம் செய்யமாட்டேன் எனத் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி!

Jeba

இன்று முதல் தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்!

Karthick

பாஜகவின் வெற்றி அதிமுகவுக்குதான் பாதிப்பு: கே.பாலகிருஷ்ணன்

L.Renuga Devi