தமிழகம் முக்கியச் செய்திகள்

234 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 75 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு, 234 தொகுதிகளிலும் கடந்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தமுள்ள 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்களில், 4 கோடியே 57 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். 

அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக, தமிழகத்தில் 75 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்குகள் எண்ணுவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு மேசையிலும் 500 வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குக்கள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகும், முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றன. 

வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அதிகாரிகள், அலுவலர்கள், வேட்பாளர்கள், கட்சிகளின் முகவர்கள் என அனைவருக்கும், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லை என்ற சான்று கொண்டவர்கள் மட்டுமே, வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கோயம்பேடு சந்தையில் நாளை சில்லறை விற்பனைக்கு தடை: வியாபாரிகள் போராட்டம்!

L.Renuga Devi

அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்திற்கு வருகிறது மத்தியக் குழு!!

Karthick

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Saravana