இந்தியா

மதுபானி கலையில் அசத்தும் ஆந்திர இளைஞர்

விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரவி கட்டாகுரி என்பவர் மதுபானி கலையின் மூலம் தொடர்ந்து மக்களை ரசிக்க வைத்து வருகிறார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரவி கட்டாகுரி தனது கலைப்படைப்பு மூலம் பார்வையாளர்களை தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இவர் பாரம்பரிய மதுபானி கலையால் சிக்கலான மற்றும் மதிப்புமிக்க ஓவியங்கள் மற்றும் வரைப்படங்களை வரைந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்..

டெல்லியில் நடந்த இந்திய கலை விழா முதல் சென்னையில் உள்ள லலித் கலா அகாடமி வரை இந்தியா முழுவதும் பல கண்காட்சிகளில் ரவி கட்டாகுரி படைப்புகள் இடம்பெற்றுள்ளன. கிரேக்கத்தின் ஹெராக்லியோனில் உள்ள லக்கோஸ் சர்வதேச கலை மற்றும் கலாச்சார பரிமாற்ற நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட ஒரே இந்தியர் இவர்தான். இந்த மதுபானி கலையில், ஓவியங்களில் வண்ணங்களை கொண்டு வர தாவரங்களில் இருந்து பெறப்படும் நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், இவர் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எனது பணி கனவுகளால் நிறைந்தது. அவை வண்ணமயமானவை, எளிமையானவை மற்றும் மக்களை ஈர்க்கக்கூடிவை என்றார். கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவின் உணர்வை அதன் அனைத்து நிலைகளிலும் இருந்து எனது படைப்பின் மூலம் காட்டவே நான் முயற்சித்து வருகிறேன்” என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!

Jayapriya

அனைத்து காவல்நிலைய லாக் அப்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Dhamotharan

IPL ஏல வரலாற்றில் புதிய உச்சம்: 16.25 கோடிக்கு ஏலம் போனார் மோரிஸ்!

Karthick

Leave a Comment