தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

என் தந்தை நிறைவேற்ற நினைத்த திட்டத்தை நான் நிறைவேற்றுவேன்: விஜய்வசந்த்

மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில், விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். மேலும், பரப்புரை மேற்கொள்ள இன்று கடைசி தினம் என்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் பரப்பரையில் ஈடுபட்ட விஜய் வசந்த் முட்டம், குளச்சல், குறும்பனை, சைமன் காலனி உட்பட கடற்கரை கிராம மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த எனது தந்தை மீனவ கிராம மக்களுக்கு நிறைவேற்ற நினைத்த திட்டங்களை தான் நிறைவேற்றி வைப்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், எனது தந்தை துண்டில் வளைவு, குடி நீர் வசதி உட்பட பல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என நினைத்தார் ஆனால் கொரோன பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டன, அதை தான் முதலில் நிறைவேற்ற உள்ளதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

Advertisement:

Related posts

யார் நமக்கு பிரதிநிதியாக வர வேண்டுமென யோசித்து முடிவெடுங்கள்: ஹெச்.ராஜா!

Jeba

“அரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது” – சென்னை உயர்நீதிமன்றம்!

Karthick

தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட உதயநிதி தயாரா? : குஷ்பு சவால்!

Saravana