தமிழகம் முக்கியச் செய்திகள்

விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டி?

சட்டபேரவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா மற்றும் துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் விருப்ப மனுக்கள் வாங்குவதை பார்வையிட்டனர். மார்ச் ஐந்தாம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனித் தொகுதிக்கு போட்டியிட 10 ஆயிரம் ரூபாயும், பொது தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது. இதேபோல், புதுச்சேரியில் தனி தொகுதிக்கு 5 ஆயிரம் ரூபாயும், பொதுத் தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது.

விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விருத்தாச்சலம் தொகுதியில் பொருளாளர் பிரேமலதாவும், அம்பத்தூர் தொகுதியில் விஜயபிரபாகரனும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

காதலர் தினம்: களைகட்ட தொடங்கிய குன்னூர் சுற்றுலா தளம்!

Jeba

சசிகலாவிற்கு நிமோனியா பாதிப்பு; மருத்துவமனை அறிக்கை!

Jayapriya

அதிமுக – பாஜக கூட்டணி உறுதி -ஜெ.பி.நட்டா

Niruban Chakkaaravarthi