செய்திகள் முக்கியச் செய்திகள்

மீண்டும் களத்தில் விஜயகாந்த்!

சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லையென தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக கொடிநாள் விழாவையொட்டி, பிரச்சார வாகனத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேரணியாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து பிரச்சார வேனில் இருந்தப்படியே விஜயகாந்த் கட்சியின் கொடியை ஏர்றி வைத்தார். இதனை தொடர்ந்த அனைவருக்கும் கொடிநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது குழந்தை ஒன்றுக்கு ஜனனி எனவும் விஜயகாந்த் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து தங்களிடம் கேட்பதை விட அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால், அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனக்கூறிய அவர், இனி ஊடக விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பர் எனவும் பிரேமலதா தெரிவித்தார் . தேமுதிக தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற அவர், சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லையெனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள்; காப்பூலில் நடந்த குண்டுவெடிப்பில் அரசு செய்தித்தொடர்பாளர் உட்பட 3 பேர் பலி!

Saravana

உத்தரகாண்ட் வெள்ளம்: தபோவான் சுரங்கத்தில் 35 பேரை மீட்கும் பணி தீவிரம்!

Jayapriya

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்துதான் முதல் பரிசு: விசாரணை அறிக்கையில் தகவல்!

Nandhakumar

Leave a Comment