சினிமா

முன்னாள் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் புகார் மனு..!

விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் கோவையில் புகார் அளித்துள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஜெயசீலன் என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் மீது அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு குற்றச் சாட்டு வைத்துள்ளார். இதையடுத்து, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட தலைவர் பிரதீப் குமார், ஜெயசீலன் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தனியார் தொலைக்காட்சியில் அவதூறு பேசி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertisement:

Related posts

ரசிகரின் சாலையோர கடைக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சோனு சூட்!

Jayapriya

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி; தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி!

Saravana

‘தளபதி’ ரஜினியாக மாறிய ஹரிஷ் கல்யாண்… ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

Saravana

Leave a Comment