இந்தியா முக்கியச் செய்திகள்

நோயாளியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்ற வீடியோ வைரல்!

ஜார்கண்டில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் இருசக்கர வண்டியில் கொரோனா நோயாளியை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் பலமு மருத்துவ கல்லூரியில் ஸ்டெச்சர் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவரை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையிலிருந்து அழைத்து சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், ஸ்கூட்டரில் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அமர்ந்திருப்பது பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவர் குணமடைந்து வீட்டுக்கு சென்றாரா அல்லது வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாரா என்ற தகவல்கள் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

Advertisement:

Related posts

”கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது”- ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Jayapriya

இனி கார்களில் கட்டாயம் ஏர் பேக்!!! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!!

Saravana Kumar

தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை : ஆர்.பி.உதயகுமார்

Karthick