தமிழகம் முக்கியச் செய்திகள்

“அரக்கோணம் இரட்டைக்கொலை விவகாரத்தை நியாயப்படுத்தக்கூடாது ” : வேல்முருகன்

சட்டமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஸ்டாலினிடம் மனம் விட்டு பேசியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், வெற்றி வாய்ப்புகள் குறித்து மனம் விட்டு பேசியதாகவும், 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராவார் எனக் கூறினார்.

மேலும், அரக்கோணம் இரட்டைக்கொலை விவகாரத்தை நியாயப்படுத்தக்கூடாது என்ற வேல்முருகன், அந்த கொலைக்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டனை கொடுக்க வேண்டும் என்றதுடன் கொலையானவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என வேல்முருகன் கூறினார். முன்னதாக திமுக துணைப்பொதுச்செயலாளர் பொன்முடி, செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக வேட்பாளர்களும் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

Advertisement:

Related posts

கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனைவி!

Karthick

இந்தோனேசியா நிலநடுக்கம்: கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

Saravana

தாய்க்கு ஆக்சிஜன் வேண்டி கதறிய மகன்; உத்தர பிரதேசத்தில் அவலம்!

Niruban Chakkaaravarthi