செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“வேளச்சேரி சம்பவம் தேர்தல் விதிமீறல்”-சத்யபிரதா சாகு!

வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்ற சம்பவத்தையடுத்து தற்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.

நாடு முழுவதும் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடத்தப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் ஏப்ரல் 6ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

தேர்தல் அன்று மாலையில் சென்னை வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாநகராட்சி ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு சென்றனர். இதனை கண்ட பொதுமக்கள், ஊழியர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கமும் கோரப்பட்டிருந்தது. மாவட்ட அதிகாரி விளக்கமளித்திருந்த நிலையில், தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.

அதில், வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்றது விதி மீறல் என்றும், விவிபேட் செயல்படவில்லையென்றாலும், 50 நிமிடம் பயன்படுத்தப்பட்டுள்ளது, 15 வாக்குகளும் பதிவாகியுள்ளது என கூறியுள்ளார். மேலும், இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார் என்றும், இது சம்பந்தமாக தலைமை தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்றும் சாகு கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்

Karthick

நீண்ட நாள் கனவு நிறைவேறியது: சமந்தா நெகிழ்ச்சி!

Gayathri Venkatesan

கொரோனா தடுப்பூசி போடும் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

Saravana