செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

புதிய சின்னத்தில் போட்டியிட்டு வென்ற விசிக!

புதிய சின்னத்தில் போட்டியிட்டு நான்கு இடங்களில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றிப் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களுக்கு மேல் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங் களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமுக, விசிக கட்சிகள் தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக் கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியாகி இருப்பதை அடுத்து, அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, திமுக. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

இதற்கிடையே திமுக கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறு இடங்களில் போட்டியிட்டது. இதில் 4 தனி தொகுதிகள், 2 பொது தொகுதிகள் ஆகும். காட்டுமன்னார் கோயில், அரக்கோணம், செய்யூர், வானூர், நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, நான்கு இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

காட்டுமன்னார் கோயில் தொகுதியில் சிந்தனைச்செல்வன், நாகப்பட்டினம் தொகுதியில் ஆளுர் ஷா நவாஸ், திருப்போரூரில் எஸ்.எஸ்.பாலாஜி, செய்யூர் தொகுதியில் பனையூர் பாபு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதிய சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மோதிரம் சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் நெகிழ்ச்சி உரை!

Niruban Chakkaaravarthi

கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனாவால் பாதிப்பு!

Karthick

கொரோனா தடுப்பூசி விலை ரூ. 200 -சீரம் நிறுவனம்

Niruban Chakkaaravarthi