முக்கியச் செய்திகள் வணிகம்

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைப்பு!

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 2 சதவிகிதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களிலும் பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டதாகவும், தற்போது பொதுமக்களின் நலன் கருதி, வாட் வரி விகிதத்தை 2 சதவீதமாகக் குறைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக புதுச்சேரியின் அனைத்து பிராந்தியங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் நாற்பது காசுகள் அளவு குறைய வாய்ப்புள்ளது, மேலும் இந்த வரி குறைப்பால் ஆண்டுக்கு 71 கோடி ரூபாய் வரை மக்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய கூகுள் சேவைகள் சீரானது!

Jayapriya

மமதாவுக்கு எதிராக களமிறங்கும் திரிணாமூல் முன்னாள் அமைச்சர்!

Karthick

மத்திய நிதிநிலை அறிக்கை: முதல்வர் பழனிசாமி வரவேற்பு

Saravana